என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாவ மன்னிப்பு
நீங்கள் தேடியது "பாவ மன்னிப்பு"
பாவ மன்னிப்பு நிகழ்ச்சி குறித்த மகளிர் ஆணைய பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என பிரதமரிடம் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் கோரிக்கை விடுத்துள்ளார். #AlphonsKannanthanam #PMModi
கொச்சி:
கேரள மாநிலத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண் ஒருவரை சில பாதிரியார்கள் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து தேவாலயங்களில் நடைபெறும் பாவ மன்னிப்பு நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மகளிர் ஆணையம் கோரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக சில பரிந்துரைகள் அடங்கிய மனு ஒன்றை தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா மத்திய அரசிடம் வழங்கினார்.
ஆனால் இந்த பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என பிரதமரிடம் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பாவ மன்னிப்பு நிகழ்ச்சி, கிறிஸ்தவ தேவாலயங்களின் அடிப்படை நம்பிக்கை’ எனக்கூறி உள்ளார்.
இதைப்போல உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்போது, இது குறித்து பரிசீலிப்பதாக அல்போன்ஸ் கன்னன்தானத்திடம், ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். #AlphonsKannanthanam #PMModi #Tamilnews

கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு 5 பாதிரியார்கள் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோ பதிவு செய்த பாதிரியார் ஒருவர், மற்ற பாதிரியார்களும் இந்த தகவலை கூறியுள்ளார். இதனால் அவர்களும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐந்து பாதிரியார்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தால் அவர்கள் மீது முறைப்படி போலீசில் புகார் செய்யப்படும் என்றும் சர்ச் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதற்கிடையே, தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாநில டி.ஜி.பி.யை தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
×

X